பெரம்பலூரில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் கண்டன

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கி. ஆளவந்தார், ஆ. ராமர், ச. அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் ம. துரைசாமி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் மூ. பாரதிவளவன், மாவட்டத் தலைவர் பி. தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். அமைதி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்திற்கு தமிழக முதல்வர் முழு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் த. கலியமூர்த்தி, ப. குமரி ஆனந்தன், சி. மருதராஜ், த. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க மாவட்டச் செயலர் சி. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com