கடைகளில் பறிமுதல் செய்த பொருள்கள் அழிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற, காலாவதியான ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வியாழக்கிழமை மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற, காலாவதியான ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வியாழக்கிழமை மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள், தயாரிப்பு நிறுவனங்கள், சாலையோர உணவுக் கடைகளில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 137.771 கிலோ, முகவரியில் இல்லாத சாக்லெட், டப்பாவில் அடைக்கப்பட்ட மின் உணவுகள், காலாவதியான மாவு, வனஸ்பதி, சாயம் கலந்த டீத்தூள், உணவு நிறமிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் 451.83 கிலோ, சமையல் எண்ணெய், காலாவதியான 184 லிட்டர் குடிநீர், லேபிள் இல்லாத மற்றும் காலாவதியான 247.7 லிட்டர் குளிர்பானங்கள் என, ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தப் பொருள்கள் நகராட்சி குப்பைக் கிடங்கில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்களால் வியாழக்கிழமை மாலை குழிதோண்டி புதைக்கப்பட்டன. 
உணவுப் பொருள்கள் தொடர்பாக புகார் செய்ய வாட்ஸ் அப் எண்...
பெரம்பலூர் மாவட்டத்தில் 5 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் பதிவு எண், தரச்சான்று இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.   கடந்த 6 மாதமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உணவு வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்தபோது, சந்தேகத்தின் பேரில் 62 சட்டம் சார்ந்த உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, ஆய்வத்திலிருந்து பெறப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து தரமில்லாத 30 உணவு மாதிரி விற்ற உணவு வணிக நிறுவனங்களின் மீது உணவுப் பாதுகாப்பு அலுவலர்களால், மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்குத் தொடரப்பட்டு, அபராதமாக ரூ. 7,28,000  விதிக்கப்பட்டுள்ளது.  
உணவுப் பொருள்கள் தொடர்பான புகார் இருந்தால் 94440-42322 என்னும் வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம். புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு, புகார் அளித்தோருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என, பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com