"எளியோரின் சட்டப்பிரச்னைகளை தீர்க்க மக்கள் குறைகேட்பு முகாம்'

எளியோரின் சட்டப்பிரச்னைகளை தீர்க்க முதல் கட்டமாக குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது என்றார்

எளியோரின் சட்டப்பிரச்னைகளை தீர்க்க முதல் கட்டமாக குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது என்றார் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான எஸ். பாலராஜமாணிக்கம்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு தினத்தை முன்னிட்டு, தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
விழாவுக்கு தலைமை வகித்து  நீதிபதி எஸ். பாலராஜமாணிக்கம் பேசியது:
கிராமப்புற பாமர மக்களும் சட்ட உதவி பெறலாம். அதற்கு எந்நேரமும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவக் காத்திருக்கிறது. ஏழை, எளிய மக்கள் தங்களிடம் பொருளாதார வசதி இல்லையே, எவ்வாறு தங்களது வழக்குகளை நடத்துவது என்று கவலைப்பட வேண்டாம். அவர்கள் எளிய முறையில் தங்களது பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள சட்ட உதவி முகாம்களை அணுகலாம். அதன் முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை (நவ. 9) முதல் 19 ஆம் தேதி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் வழக்குரைஞர்கள் குழுமமும், சமூக சட்ட ஆர்வலர்கள் குழுமமும் பொதுமக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிய உள்ளனர். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.  
தொடர்ந்து, சட்டப்பணிகள் நோக்கங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான பாலராஜமாணிக்கம்.
இந்நிகழ்ச்சிகளில், மகிளா நீதிமன்ற நீதிபதி என். விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் ஏ. முரளீதரன், சார்பு நீதிபதி சிரிஜா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் எம்.வினோதா, நீதித்துறை நடுவர்கள் ஜி. அசோக்பிரசாத், எம். மோகனப்பிரியா, உரிமையியல் நீதிபதி பி.கருப்பசாமி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி, அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் முகமது இலியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com