குன்னத்தை தலைமையிடமாகக்கொண்டு வருவாய் கோட்டம் அமைக்க கோரிக்கை

பணிகளை எளிதாக்கும் வகையில் பெரம்பலூர் வருவாய்க் கோட்டத்தின் எல்லைகளைப் பிரித்து, குன்னத்தை

பணிகளை எளிதாக்கும் வகையில் பெரம்பலூர் வருவாய்க் கோட்டத்தின் எல்லைகளைப் பிரித்து, குன்னத்தை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
அரசுக்கும்- பொதுமக்களுக்கும் பாலமாக செயல்படும் வருவாய் கோட்ட அலுவலக பணிகள் பணிச்சுமையால் தாமதமாக நடைபெறுகின்றன. 
இதனால், மாவட்டத்துக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் கிடப்பில் உள்ளன. பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், கோட்டத்தின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிதாக வருவாய் கோட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய வட்டங்கள் உள்ளன. இந்த 4 வட்டங்களையும் உள்ளடக்கி பெரம்பலூர் வருவாய் கோட்டமாக உள்ளது. இதனால், தமிழகத்திலேயே ஒரு மாவட்ட எல்லையை ஒரு வருவாய் கோட்ட எல்லையாக கொண்டது பெரம்பலூர் வருவாய் கோட்டமாகும். 
எல்லை பெரியதாக உள்ளதால், பணிச்சுமையால் பணிகளில் தேக்கநிலை காணப்படுகிறது. 
குறிப்பாக, காவல்துறை மூலம் ஒரே கோட்டமாக இருந்த பெரம்பலூரை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரித்து மங்களமேடு என்ற புதிய கோட்டத்தை உருவாக்கினர். இதேபோல் வருவாய்த் துறையிலும் ஒரே வருவாய் கோட்டமாக உள்ள பெரம்பலூரை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
பெரம்பலூர் வருவாய் கோட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டப் பேரவையை 
தொகுதி வாரியாக 2 கோட்டமாக பிரிக்கலாம். 
அதாவது, நிர்வாக வசதி அடிப்படையில் பெரம்பலூர் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர், வேப்பந்தட்டை எல்லைகளை கொண்டு பெரம்பலூர் வருவாய் கோட்டமாகவும், குன்னம் தொகுதிக்குள்பட்ட குன்னம், ஆலத்தூர் ஆகிய எல்லைகளைக் கொண்டு குன்னம் வருவாய் கோட்டமாக பிரிக்கலாம் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com