பெரம்பலூர் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி

பெரம்பலூர் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி அரியலூர் மான்ட்போர்ட் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி அரியலூர் மான்ட்போர்ட் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியை மான்ட்போர்ட் பள்ளி முதல்வர் டோமினிக் சாவியோ, அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்  ராஜேந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.  
அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் இருந்து 16 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. இதில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடத்தை அரியலூர்  மான்ட்போர்ட் பள்ளியும், 2 ஆம் இடத்தை புகளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், 3 ஆம் இடத்தை வரதராஜன்பேட்டை டான்பாஸ்கோ பள்ளியும் பெற்றது.
19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடத்தை கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளியும், 2 ஆம் இடத்தை அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், 3 ஆம் இடத்தை சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடத்தை அரியலூர் மான்ட்போர்ட் பள்ளியும், 2 ஆம் இடத்தை புகளுர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 3 ஆம் இடத்தை வரதராஜன்பேட்டை டான்போஸ்கோ பள்ளியும், 17 வயதுக்குட்பட்ட  பெண்கள் பிரிவில் முதலிடத்தை கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளியும், 2 ஆம் இடத்தை வரிசைப்பட்டி சரஸ்வதி வித்யாலயா பள்ளியும், 3 ஆம் இடத்தை பரணம் அரசு பள்ளியும் பெற்றன.
வெற்றிபெற்ற அணிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செட்டிகுளம் அன்பரசு, அரியலூர் வில்லாளன், தர்மலிங்கம், வீரபாண்டியன், இளங்கோவன், மான்ட்போர்ட் பள்ளி ஹாக்கி பயிற்சியாளர் ஜபருல்லா ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com