ஒதியம் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், ஒதியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய பயணம் நண்பர்கள் அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், ஒதியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய பயணம் நண்பர்கள் அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில், பனை மரங்கள் வளர்ப்பதன் அவசியம், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், மழை நீர் சேமிப்பு, நீர்நிலை மேலாண்மை, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீங்குகள், இயற்கை வேளாண்மையின் அவசியம், காடுகளின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு காணொளிக் காட்சி மூலம் விவரிக்கப்பட்டது. மேலும், நெகிழிப் பைகளை அறவே தவிர்ப்போம், நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை இயன்றவரை குறைப்போம் என்னும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நூல்கள், பள்ளி நூலகத்துக்கு புதிய பயணம் நண்பர்கள் அமைப்பு சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நிகழ்சிக்கான ஏற்பாடுகளை, புதிய பயணம் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகவன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com