நாளை முதல் ஆன்லைனில் பிளஸ் 2 துணைத்தேர்வு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை ஆன்லைன் மூலம் திங்கள்கிழமை முதல்


பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை ஆன்லைன் மூலம் திங்கள்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள பிளஸ் 2 துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உள்பட) திங்கள்கிழமை (செப்.17) பிற்பகல் 2 மணி முதல்  இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட இணையதளத்திற்குச் சென்று தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்தால், திரையில் தோன்றும் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில், செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும்.
செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாதவரகள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com