மாவட்ட தடகளப் போட்டிகளில் பேரளி அரசுப் பள்ளி சிறப்பிடம்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகளில் பேரளி அரசுப் பள்ளி சிறப்பிடம் பெற்றது. 

பெரம்பலூர் மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகளில் பேரளி அரசுப் பள்ளி சிறப்பிடம் பெற்றது. 
பெரம்பலூர் மாவட்ட டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், 19 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் பேரளி அரசுப்பள்ளி மாணவி ம. காவியா 16 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த அளவில் 2 ஆம் இடமும், அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடமும் பெற்றார். 
மேலும், 400 மீ., தடை ஓட்டம், கோல் ஊன்றித் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் முதலிடமும், உயரம் தாண்டுதல், 100 மீ., ஓட்டத்தில் 2 ஆம் இடமும் பெற்றார். மாணவி சி. நர்மதா தட்டு எறிதல், 100 மீ., தடை ஓட்டம் ஆகிய போட்டிகளில் 2 ஆம் இடமும், மும்முறை தாண்டுதலில் 3 ஆம் இடமும், ஆ. அருள்மணி ஈட்டி எறிதலில் 2 ஆம் இடமும், 5,000 மீ ஓட்டத்தில் 3 ஆம் இடமும் பெற்றனர்.
மேலும், வளைபந்து போட்டியில் 19 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் ஒற்றையர் ஆட்டத்தில் முதலிடமும், இரட்டையர் ஆட்டத்தில் 2 ஆம் இடமும், கேரம் போட்டியில் 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் இரட்டையர் ஆட்டத்தில் முதலிடமும், சைக்கிள் பந்தயத்தில் 14 மற்றும் 17 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடமும், 14 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் 2 ஆம் இடமும் பெற்றனர்.
19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் முதலிடமும், 17 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான எறிபந்து போட்டியில் 2 ஆம் இடமும் பெற்றனர். இவர்கள் அனைவரும், மண்டல அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார் பள்ளி தலைமை ஆசிரியர் அ. பிரேம்குமார்.  நிகழ்ச்சியின்போது, உடற்கல்வி ஆசிரியர் சி. பழனியம்மாள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com