கந்தர்வகோட்டை பகுதியில் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் பருவமழை பெய்யாததால் கருகி வருவதைப் பார்த்து விவசாயிகள் பெரிதும் கவலையில் உள்ளனர்.
கந்தர்வகோட்டை பகுதியில் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் பருவமழை பெய்யாததால் கருகி வருவதைப் பார்த்து விவசாயிகள் பெரிதும் கவலையில் உள்ளனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பருவமழையை நம்பி சுமார் 1,763 ஹெக்டேர் நெல் நடவும், 87 ஹெக்டேர் நேரடி நெல்சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பெரும்பாலும் பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையை நம்பி பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் பல்வேறு பகுதிகளில் நெல்நடவும், நேரடி விதைப்பும் செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு மழைபெய்யவில்லை. ஆழ்குழாய் மூலமாக தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தவர்களுக்கும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயத்திற்கான தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகிவருகின்றன.
கடந்த ஆண்டு இந்தப் பகுதிகளில் 2,419 ஹெக்டேர் நெல்சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிறு குளங்கள், இரண்டு பெரிய கண்மாய்களில் கருவேல மரங்கள் மண்டி நீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால், நெல் பயிரிடும் பரப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழையை நம்பி நெல்லை விதைத்தோம்.
ஆனால், பருவமழை பெய்யாமல் ஏமாற்றியதால், நெற்பயிர்கள் கருகி ஆடு, மாடுகள் மேயும் நிலையில் உள்ளது. வானம் பார்த்த பகுதியான கந்தர்வகோட்டை பகுதியை நீர்வளம் நிறைந்த பகுதியாக மாற்ற உரிய திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.
இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காவிரிப் பாசன பகுதியான திருவோனம் கிளை ஆற்றுப் பாசனத்துடன் இணைத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படையும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com