நோய்களிலிருந்து குழந்தைகளை காக்க விழிப்புணர்வு தேவை

பெற்றோர்கள் கோடைகால நோய்களில் இருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம் என்றார் மருத்துவர் இரா. சுந்தர்.

பெற்றோர்கள் கோடைகால நோய்களில் இருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம் என்றார் மருத்துவர் இரா. சுந்தர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் ஜேசி சென்ட்ரல் சங்கம் சார்பில் சனிக்கிழமை முதல்வர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடத்திய கோடைகால வெப்பத்தின் மூலமாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல் நலக் குறைபாடுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்த மருத்துவ ஆலோசனை முகாமில் பங்கேற்று மேலும் பேசியது:
கடந்த காலங்களைவிட வெப்பத்தின் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், விழிப்புணர்வும் பெற்றோர்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
அம்மை நோய்கள், உடல் சூட்டின் மூலம் ஏற்படும் கட்டிகள். கொப்புளங்கள் வராமல் பாதுகாக்க உச்சிவெயில் நேரங்களில் வீடுகளில் அல்லது காற்றோட்டமான நிழல் இருக்கக்கூடிய இடங்களில் ஓய்வுவெடுக்க வேண்டும். வாரம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் எண்ணெய்க் குளியல் அவசியம். எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை போன்ற பழச் சாறுகளும், நீர்மோர், இளநீர், நுங்கு, காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது நலம். அதே அளவுக்கு நீர் அதிகம் அருந்தச் செய்வது பெற்றோரின் கடமை. மண்பானை நீர் அருந்தலாம். தொடர்ந்து சிறுநீர் மஞ்சளாக இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
இயற்கை விவசாய ஆர்வலர் சண்முக பழனியப்பன், ப. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். ஜேசி சங்கத் தலைவர் கே. யோகாபாண்டியன் வரவேற்றார். பள்ளியின் நிர்வாக இயக்குநர் தங்கநிவேதிதா, துணை முதல்வர் குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தைகள், பெற்றோர் பங்கேற்றனர். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கௌரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com