தேசிய அளவிலான யோகா போட்டி வித்யா விகாஸ் பள்ளி சிறப்பிடம்

சென்னையில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் அனைத்துப் பிரிவுகளிலும் கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் அனைத்துப் பிரிவுகளிலும் கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா கூட்டமைப்பும், இந்தியன் யோகா அமைப்பும் இணைந்து தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகளை சென்னையில் கடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடத்தின.
இதில் வித்யா விகாஸ் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் செந்தில் நாதன் 16-18 வயதுப்பிரிவில் பின்னால் வளையும் யோகாசனப் பிரிவில் முதலிடம் வென்றார். 9ஆம் வகுப்பு மாணவி ஆஸிமா 13-15 வயது பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தங்கப்பதக்கம் பெற்றார்.
8ஆம் வகுப்பு மாணவி விஜயலெட்சுமி 13-15 வயதுப்பிரிவில் பின்னால் வளையக்கூடிய ஆசனப்பிரிவில் முதலிடம் பெற்றார். முறுக்குநிலை ஆசனப்பிரிவில் இப்பள்ளியின் சாகித்யா இரண்டாம் இடத்தை வென்றார். மற்றொரு மாணவி ஆதிஸ்ரீ பானைமேல் ஆசன நிலையில் இரண்டாம் இடத்தை வென்றார். பொதுப்பிரிவு யோகாசனத்தில் மாணவி தாரிகாவும் பரிசுப்பட்டியலில் இணைந்து கொண்டார். இதர மாணவர்கள் அருண் மற்றும் சரவணன் ஆகியோர் ஆறுதல் பரிசுகளை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் சிங்காரவேல், செயலாளர் குணசேகரன் மற்றும் மேலாண் அறங்காவர்கள் இராமலிங்கம், முத்துசாமி ஆகியோரும் செயல் அறங்காவலர்கள் பாஸ்கரன் மற்றும் மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர்.
அப்போது பள்ளியின் முதுநிலை முதல்வர் மதனகோபால், பள்ளி முதல்வர்கள் சரவண ஐயப்பன், அன்னபூரணி பாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com