பணிவாய்ப்பு பெற ஆங்கிலம் அவசியம்'

பொறியியல் மாணவர்கள் நன்றாக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டால் மட்டுமே நல்ல பணியில் சேர முடியும் என்றார் திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஆர். பிரபாகரன்.

பொறியியல் மாணவர்கள் நன்றாக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டால் மட்டுமே நல்ல பணியில் சேர முடியும் என்றார் திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஆர். பிரபாகரன்.
புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல், தகவல் தொடர்புத்துறை சார்பில் கூட்டமைப்புத் தொடக்க விழா பாரதி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஆர். பிரபாகரன் பேசியது:
தகவல் தொழில்நுட்பத் துறை நொடிக்கு நொடி வியக்கத்தக்க வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த துறைகள் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து ஆட்டுவிக்கும் துறையாக மாறிவருகிறது.
மேலும், வேலைவாய்ப்புகளிலும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றுகிறது. நம்நாட்டில் தான் அதிகளவில் பொறியாளர்கள் உருவாகின்றனர். அதில், பணிபுரியத் தகுதியுடையவர்கள் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆங்கிலம் தெரியாத காரணத்தினாலே பல மாணவர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர். மேலும், பலருக்கு நேர்முகத்தேர்வையே எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. பொறியியல் மாணவர்கள் முறையாக ஆங்கிலம் கற்று கல்லூரியில் நடைபெறும் வளாக நேர்காணலை துணிச்சலாக சந்தித்தாலே வேலைவாய்ப்பு தானாக தேடிவரும் என்றார்.
விழாவில் கல்லூரியின் செயலர் கே.ஆர்.குணசேகரன், அறங்காவலர் கே.ரெங்கசாமி, கல்லூரி முதல்வர் திலகவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com