தாந்தாணி காளியம்மன் கோயில் புரவிஎடுப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தாந்தாணி காளியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தாந்தாணி காளியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மழை வேண்டி காளியம்மனுக்கு புரவிஎடுப்பு எனும் குதிரை எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் நேர்த்திக்கடனாக களிமண்ணால் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட காளியம்மன், குதிரை மற்றும் காளை சிலைகள் ஆகியவற்றை பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர்.
அனைத்து சிலைகளும் துவரடிமனை கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள தாந்தாணி கிராமத்துக்கு மேளதாளம் முழங்க வானவேடிக்கைகளுடன் வந்து சேர்ந்தபின்னர் அனைத்து சிலைகளுக்கும் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஊர்வலத்தில் தாந்தாணி, சிலட்டூர், எரிச்சி, சிதம்பரவிடுதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com