சனி மகா பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட சிவலாயங்களிலுள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சனிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட சிவலாயங்களிலுள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சனிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர்.
கல்வியில் மேன்மை பெறுவார்கள் என்பது ஐதீகம். அதிலும் சனிப் பிரதோஷம் நாளில் சிவப்பெருமானையும், நந்தியெம்பெருமானையும் வழிபடுவது மிகவும் சிறப்பானது.
அரியலூர் மாவட்டம் திருமழபாடியிலுள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, பழச்சாறு, இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து வைத்தியநாதசுவாமிக்கும், சுந்தராம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் நடைபெற்றது. திருமானூர் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர், பாலாம்பிகை உடனாய கார்கோடேஸ்வரர், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரர், கீழப்பழுவூர் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார் உள்ளிட்ட கோயில்களில் உள்ள நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதேபோல், அரியலூர்,செந்துறை,ஜயங்கொண்டம்,ஆண்டிமடம்,தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன் ஆலயங்களில் சிறப்பு ஆபிஷேகம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவப்பெருமானையும், நந்தியெம்பெருமானையும் வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com