பட்டா வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பட்டா வீட்டுமனைகளை பத்திரவு பதிவு செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பட்டா வீட்டுமனைகளை பத்திரவு பதிவு செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அரியலூரில் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய லே-அவுட் புரமோட்டர்ஸ் நலச் சங்கம், அரியலூர் மாவட்ட மனைகளம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
வரன்முறை கட்டணம், அபிவிருத்தி கட்டணம், திறந்தவெளி நிலத்துக்குண்டான கட்டணம் என்று தற்போது அறிவித்துள்ள வரன்முறை சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஒரே கட்டணமாக ஊராட்சி பகுதிகளில் சதுர அடிக்கு ரூ. 2 எனவும், பேரூராட்சி பகுதிகளில் சதுர அடிக்கு ரூ.5 எனவும், நகராட்சி பகுதிகளில் சதுர அடிக்கு ரூ. 8 எனவும், பெருநகராட்சி பகுதிகளில் சதுர அடிக்கு ரூ.10 எனவும்,பெருநகர மாநகராட்சி பகுதிகளில் சதுர அடிக்கு ரூ.20 எனவும் மனைகள் அமைந்துள்ள பகுதிக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும்.
அங்கீகாரம் பெறாத பட்டா வீட்டுமனை பரிவுகளில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கும் குறைவாகவோ, கூடுதலாகவோ விற்பனை செய்திருந்தாலும், விற்பனை செய்யவில்லை என்றாலும் விற்பனை செய்த மனைகள் போக மிகுதி மனைகளுக்கு மட்டும் ஒரே மாதிரியான சாதாரண கட்டணத்தை மட்டுமே நிர்ணயித்து எளிமைப்படுத்திட வேண்டும்.
அதேபோல் இல்லாத, விற்கப்படாத பட்டா வீட்டு மனைகளுக்கு மொத்தமாக இல்லாமல்,தனித்தனி மனைகளுக்கும் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்காமல் கட்டணம் செலுத்தி அங்கீகாரம் பெறும் வகையில் வழிவகை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். தேசியத் தலைவர் ஆ.ஹென்றி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அகில இந்திய நிலம்,வீடு மனை அபிவிருத்தியாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எம்.தங்கராஜ்,அகில இந்திய லே-அவுட் புரமோட்டர் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.பிரபு, அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஆர்.கே.எஸ் ரியல் எஸ்டேட் ஆர்.கே.செல்வமணி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com