தென்னையில் பூச்சிக் கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

தென்னையில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த வேர் ஊட்டம் குறித்த செயல்முறை விளக்கத்தை அரசர்குளம் கீழ்பாதி கிராம விவசாயிகளுக்கு விவசாய கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை செய்து காட்டினர்.  

தென்னையில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த வேர் ஊட்டம் குறித்த செயல்முறை விளக்கத்தை அரசர்குளம் கீழ்பாதி கிராம விவசாயிகளுக்கு விவசாய கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை செய்து காட்டினர்.  
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி 4ஆம்  ஆண்டு மாணவர்கள் ம. முல்லைவேந்தன், க. மனோபாரதி, கு. முத்துபாலா, மு. ஜீவா, இரா.பா.புவனேஸ்வரன், த.கணேஷ்குமார், க.தினகரன் உள்ளிட்ட மாணவர்கள் கிராமப்புற பணி அனுபவத்திற்கான பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தென்னையில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேர்ஊட்டம் முறையை விவசாயிகளுக்கு புதன்கிழமை விளக்கினர். வேர் ஊட்டம்  மூலம் கூண்வண்டு  மற்றும் குருந்தலைப்புழு  ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாணவர்கள் நேரடியாக செயல்விளக்கம் அளித்தனர். 
இதை தொடர்ந்து கிராம மதிப்பீடு செய்யப்பட்டது.  இந்த கூட்டத்தில் கிராம விவசாயிகள், மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com