பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக ஐய்யப்பன் பஜனை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கொன்னைப்பட்டி ஐய்யப்ப பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.