"உணவு முறைகளால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும்'

உணவு முறைகளால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார் புதுகை டீம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எச். சலீம்.
"உணவு முறைகளால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும்'

உணவு முறைகளால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார் புதுகை டீம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எச். சலீம்.
புதுக்கோட்டை கைக்குறிச்சி பாரதி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் தொடர்ச்சியாக திங்கள்கிழமை நடைபெற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வு, இலவச பரிசோதனை முகாமில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் பேசியது:
நாட்டில் 6.5 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயை பொருத்தவரை பரம்பரையாகவும், சுற்றுச்சூழலாலும், வாழ்க்கைமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி இல்லாமை, அதிக உடல் எடை, மன உளைச்சல், மேலைநாட்டு உணவு முறைகள், குளிர்பானங்கள், புகை பிடித்தல், மது அருந்துதல், கணையத்தில் கல் படிதல், ஸ்டிராய்டு மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளுதல், பெண்கள் 4 கிலோ எடைக்கு மேல் குழந்தை பெற்றெடுத்தல், அடிக்கடி கருச்சிதைவு போன்ற காரணங்களாலும் சர்க்கரை நோய் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். இது கொடிய நோய் அல்ல. நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை எரிக்கப்பட்டு சக்தியாக மாற கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் அவசியம். இந்த இன்சுலின் குறைவாக சுரக்கும்போது, உணவில் உள்ள சர்க்கரை சக்தியாக மாறாமல் ரத்தத்தில் தங்கிவிடுகிறது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மூலம் இன்சுலின் சுரப்பதைத் தூண்டலாம். முற்றிலும் குணப்படுத்த முடியாது.
ஆனால், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, ரத்தப் பரிசோதனை, உடல் எடை, ரத்த அழுத்த கண்காணிப்பு, மருத்துவரின் ஆலோசனை போன்றவற்றால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.
முகாமுக்கு, கல்லூரித் தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினருமான குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர். குணசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சி. சூர்யா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரத்தப் பரிசோதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com