எம்எல்ஏ நிதியில் குளத்தை தூர்வாரக் கோரி திமுக மனு

புதுக்கோட்டை புதுக்குளத்தை தூர்வார சட்டப்பேரவை உறுப்பினர் ஒதுக்கியுள்ள ரூ. 25 லட்சம் நிதியைப் பயன்படுத்த வேண்டும் என திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை புதுக்குளத்தை தூர்வார சட்டப்பேரவை உறுப்பினர் ஒதுக்கியுள்ள ரூ. 25 லட்சம் நிதியைப் பயன்படுத்த வேண்டும் என திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம், திமுக நகரச் செயலாளர் க. நைனாமுகமது தலைமையில் திமுகவினர் அளித்த மனு:
புதுக்கோட்டை மேற்குப் பகுதியில் உள்ள சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான கவிநாடு பெரிய கண்மாய் வறட்சியால் தற்போது மைதானம் போலக் காட்சியளிக்கிறது. மேலும், இதில் வேலிக் கருவை மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. மழைக்காலம் தொடங்கும் முன்னதாக மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து கண்மாயைத் தூர்வாரி, கூடுதல் நீர் நிரம்பும் வகையில் கண்மாயை ஆழப்படுத்த வேண்டும். இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். மேலும், இக்கண்மாய் மூலம் 60-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைவர்.
இதேபோல, புதுக்கோட்டை கிழக்குப் பகுதியில் உள்ள புதுகுளத்தை தூர்வாரும் நோக்கில் புதுகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன்அரசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்குவதாக கடந்த 30.5.2017 -ல் மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் அளித்தார்.
ஆனால், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குளத்தை தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய விதிகள் இல்லை என கூறி, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கும் புதுக்குளத்தை தூர்வார வேண்டியதன் அவசியம், அவசரம் கருதி விதிவிலக்களித்து எம்எம்ஏ நிதியைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com