கரூரில் அறிவியல் இயக்க கிளை மாநாடு

ஆவுடையார்கோவில் ஒன்றியம், கரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் ஒன்றியம், கரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூர் கிளைத் தலைவரும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான பூதலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மணவாளன், மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கரூர் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவர்கள் வெளியூர் சென்று படித்துவர காலை 6.45 மணிக்கும், 9.15 மணிக்கும் இடையே பேருந்து வசதியில்லை. இதனால், அவர்கள் கல்வி கற்பது பாதிக்கப்படுகிறது.
எனவே, காலை 8 மணிக்கு இளம்பாவயல், குமுளூர், தச்சமல்லி, ஆவுடையார்கோவில் வழியாக அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும். கரூரில் உள்ள வங்கியில் நீண்டகாலமாக செயல்படாமல் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மேலும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கிளைச் செயலாளர் சாம்சன் வரவேற்றார். கிளை பொருளாளர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com