கல்லுக்காரன்பட்டியில் ஜல்லிக்கட்டு

கந்தர்வகோட்டை அருகேயுள்ள கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் ஜல்லிக்கட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.  

கந்தர்வகோட்டை அருகேயுள்ள கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் ஜல்லிக்கட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.  
விழாவை மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராமசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெ. லோகநாதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். விழாவில்  சுமார் 716 மாடுகள் கலந்துகொண்டன. 200 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்கினர். இதில் 29 மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 5 மாடுபிடிவீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளுக்கு மாட்டின் உரிமையாளருக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு  பரிசுகள்  வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கல்லுக்காரன்பட்டி ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com