"லட்சியம்தான் சாதனைக்கு அடித்தளமாக அமையும்'

லட்சியமே சாதனைக்கு  அடித்தளம் என்றார் பட்டிமன்ற நடுவர் இராஜபாளையம் கவிதா ஜவஹர்.

லட்சியமே சாதனைக்கு  அடித்தளம் என்றார் பட்டிமன்ற நடுவர் இராஜபாளையம் கவிதா ஜவஹர்.
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி    மகளிர் கலை ,றந அறிவியல் கல்லூரியில் அந்நிறுவனங்களின் தலைவர் குருதனசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற  முதலாம் ஆண்டு இளநிலைப்பட்ட  வகுப்புகள் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி மேலும் அவர் பேசியது:
புதுகை மாவட்டத்தில் பெண்களாகப் பிறந்ததற்குப்  பெருமைப்படவேண்டும்.  ஏனெனில்,   இந்த மாவட்டத்தில் பிறந்து உலகமே போற்றும் வகையில் உயர்ந்தவரும், நாட்டின் முதல் பெண் மருத்துவருமான  முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த மண் இது.  உனக்குள் சாதிக்கவேண்டும் என்ற தீ  எரிந்து கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை உலகுக்கு வெளிக்காட்டுங்கள். உங்களை உலகம் வெளிக்காட்டும் என்றார்.  பேராசிரியர் மு. பாலசுப்பிரமணியன் தொகுத்தளித்தார். இதில், கல்லூரியின் முதல்வர் முனைவர்க.திலகம் ஆகியோர்   முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் பொ. அண்ணாமலை தொடக்கவுரையாற்றினார். கல்லூரி இயக்குநர்  ஜானகி சுவாமிநாதன் வரவேற்றார். துணை முதல்வர்  மா. குமுதா நன்றி கூறினார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com