கடையாத்துப்பட்டியில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டி கிராமத்தில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டி கிராமத்தில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. கடையாத்துப்பட்டி ஸ்ரீ அரியநாயகி அம்பாள் 29 ஆம் ஆண்டு மது எடுப்பு உற்ஸவத்தை முன்னிட்டு, வல்லம்பர் சமுதாயம் நடத்தும் 9 ஆம் ஆண்டு பந்தயம் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் கோயில் எல்லையிலிருந்து நடைபெற்றது.
 பெரிய மாடு பிரிவில் 8 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதில், புதுகை மாவட்டம் கே.புதுப்பட்டி அம்பாள் மாடு ரூ.11,009-ம், அறந்தாங்கி அப்துல் மஜீத் மாடு ரூ.10,009-ம்  தினையாகுடி ஆர்.கே. சிவா மாடு ரூ.9,009-ம், கொத்தக்கோயில் சோலைஆண்டவர் மாடுகள் ஆறுதல் பரிசாக ரூ.2,009ம் பெற்றன.
நடுமாடு பிரிவில் 14 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டதில், கீழப்பள்ளம் எம்.ஆர்.கண்ணன் மாடுகள் ரூ.8,009-ம், புண்ணைவயல் நந்தினி மாடுகள் ரூ.7,509-ம் அறந்தாங்கி பி.எல்.பி.தினேஷ் கார்த்திக் மாடுகள் ரூ.7,009-ம், வயிரிவயல் வீரமுனியாண்டவர் கோயில் மாடுகள் ரூ.1,509-ம் ரொக்கமாகப் பெற்றன. கரிச்சான் மாடுகள் பிரிவில் 21 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதில், கப்பலூரார் மாடுகள் ரூ.7,009-ம், வேட்டணிவயல் மாடுகள் ரூ.6,509-ம், மஞ்சக்கரை நாட்டுமங்களம் மதி மாடுகள் ரூ.6009-ம்,வைரிவயல்
வீரமுனியாண்டவர் கோவில் மாடுகள் ரூ.1,009 பரிசாக பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com