"வைட்டமின்-ஏ சத்து முதுமையைத் தடுக்கும்'

வைட்டமின்-ஏ சத்து மனிதர்களின் முதுமையைத் தடுக்கவல்லது என்றார் அரசு மருத்துவர் வீ.சி. சுபாஷ்காந்தி.

வைட்டமின்-ஏ சத்து மனிதர்களின் முதுமையைத் தடுக்கவல்லது என்றார் அரசு மருத்துவர் வீ.சி. சுபாஷ்காந்தி.
புதுகை அரசு ராணியார் மருத்துவமனையில் முதன்மை மகப்பேறு மருத்துவர் எஸ்.கற்பகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற  விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
கேரட், தக்காளி,கீரை வகைகள், ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு பழங்கள்,பால்,முட்டை மற்றும் மீன் ஆகியவற்றில் வைட்டமின் ஏ சத்து அதிகளவில் உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  தோல் சம்பந்தப்பட்ட காயங்களை விரைவில் குணமாக்குகிறது. வைட்டமின் ஏ முதுமையைத் தடுப்பதோடு சிறந்த ஆன்டி, ஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு புற்றுநோயைத் தடுக்கிறது.  வைட்டமின் ஏ-யில் உள்ள ரெட்டினாயிக் அமிலம் நுரையீரல், மார்பகம், கருமுட்டை, கர்ப்பவாய், சிறுநீர்ப்பை போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கிறது. தமிழக அரசால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படும் வைட்டமின் ஏ திரவம் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வரும் 25 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது என்றார்.  
நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.இந்திராணி, மருத்துவர் புவனேஸ்வரி,பேராசிரியை ராதா ஆகியோர் முன்னிலையில் கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மாணவிகள் வைட்டமின் - ஏ நிறைந்த உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தி பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர். தொடர்ந்து,தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோம் என்ற உலக தண்ணீர் தின உறுதி எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக செவிலியர் கண்காணிப்பாளர் ஜெஸிராஜம் வரவேற்றார். செவிலியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com