அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விண்ணப்பம் வாங்கத் திரண்ட மாணவிகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி சில நாள்கள் கடந்துள்ள நிலையில் புதுகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கலை அறிவியல் படிப்புகளில்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி சில நாள்கள் கடந்துள்ள நிலையில் புதுகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்காக நூற்றுக்கணக்கான மாணவிகள் வியாழக்கிழமை திரண்டு விண்ணப்பத்தை வாங்கிச் சென்றனர்.
அண்மையில் வெளியான பிளஸ் தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் 18,853 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் பொறியியல், பாலிடெக்னிக், கலை அறிவியல், கல்வியியல், கேட்டரிங், தீத்தடுப்பு மேலாண்மை உள்பட 40-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், புதுகை அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான மாணவிகள் தனியாகவும், பெற்றோருடன் வந்தும் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.
இக்கல்லூரியில் 13 பிரிவுகளில் இளங்கலையும், 4 பிரிவுகளில் முதுகலைப்பிரிவும் ஷிப்ட் முறையில் கற்பிக்கப்படுகிறது. சுமார் 900 முதல் 1000-ம் பேர்களை சேர்க்க சேர்க்கை நடைபெறுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 50-க்கும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு இலவசமாகவும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற ஜூன் 5-ஆம் தேதியும், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 6-ஆம் தேதியும், பி.காம், பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 7-ஆம் தேதியும், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 8-ஆம் தேதியும், வரலாறு, பொருளியியல், சுற்றுலா பயண மேலாண்மை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 12-ஆம் தேதியும் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறுமென கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com