சவுதி அரேபியாவில் செவிலியர் பணி: சென்னை, பெங்களூரில் நேர்காணல்

சவுதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி, டிப்ளமோ தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவுக்குத் தேவைப்படும் தொடர்ந்து

சவுதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி, டிப்ளமோ தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவுக்குத் தேவைப்படும் தொடர்ந்து  2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற ஆண், பெண் செவிலியர் பணிக்கான நேர்காணல் மே 21, 22-ல் சென்னையிலும், மே 23, 24-ல் பெங்களூரிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனைக்குக்குத் தேவைப்படும் 150 ஆண், பெண் செவிலியிர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு தகுதி, அனுபவத்துக்கேற்ப குறைந்தபட்சம் ரூ. 55,000- மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவக் காப்பீடு  போன்றவை வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் மே 21, 22ஆம் தேதிகளிலும், பெங்களூரில் இன்பேன்டா சாலையில் உள்ள மோனார்க் லக்சர் என்ற ஹோட்டலில் வரும் 23, 24 ஆம் தேதிகளிலும் காலை 9 மணி முதல் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் என்ற முகவரியிலும், 044-2250 5886, 2250 2267, 2250 0417, 82206 34389 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com