நீட் தேர்வை ரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்

தமிழக மாணவர்களின் நலன்கருதி நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் ஆளூர் ஷாநாவாஸ்.

தமிழக மாணவர்களின் நலன்கருதி நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் ஆளூர் ஷாநாவாஸ்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற டாக்டர் அம்பேத்கரின் 126ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
 மாநில பாடத்திட்டத்தின் கீழ் சமச்சீர் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர்கள் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ கேள்விகள் அடங்கிய நீட் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்ள முடியும். ஒன்றரை விழுக்காடு மாணவர்கள் தான் சிபிஎஸ்இ வழியில் பயின்று வருகின்றனர். எனவே மாநில பாடத்தின்கீழ் பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதி நீட்தேர்வினை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை நம்மீது திணிக்க முயற்சிக்கிறது. மொத்தத்தில் 3 விழுக்காடு மக்களின் மொழியே சம்ஸ்கிருதம். இந்தி மொழி தெரிந்திருந்தால் முன்னேறலாம் என்ற தவறான புரிந்துணர்வு நம்மிடையே உள்ளது. இந்தி படிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இடஒதுக்கீடு வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற அமைப்புகள் இதுநாள்வரை பேசிவந்தன. தற்போது இடஒதுக்கீட்டில் படித்து, மருத்துவராகி, தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் நின்று வெற்றி பெற்ற மருத்துவர் கிருஷ்ணசாமி போன்றோர் கூறுவது வேதனைக்குரியது. இடஒதுக்கீடு என்பது சமூகநீதி. இட ஒதுக்கீட்டினை பாதுகாக்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலர் ப. சசிகலைவேந்தன் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com