புதுகையில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை நகராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 20 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த பிறகு கூறியதாவது:
புதுக்கோட்டை நகராட்சி திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் பொதுப்பணித்துறை மூலம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை பணியையும், ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலையரங்கத்தின் கட்டுமானப் பணிகள் உள்பட மொத்தம் ரூ. 20 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை தரமான கட்டுமானப் பொருள்களை கொண்டு விரைவாக கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் ஆட்சியர்.
ஆய்வின்போது, திட்ட இயக்குநர் மு. சந்தோஷ்குமார், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com