காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 5ஆவது நாளாக ரயில் மறியல்: 73 பேர் கைது

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, தஞ்சாவூர் அருகே காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, தஞ்சாவூர் அருகே காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும். மேகேதாட்டில் கர்நாடக அரசுப் புதிய அணைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மே 15-ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே நாச்சியார்பட்டியில் காலை 10 மணியளவில் வந்த திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயிலை 40 நிமிஷங்கள் மறித்து முழக்கங்கள் எழுப்பினர்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைவர் சுப. உதயகுமார், திரைப்பட இயக்குநர் களஞ்சியம், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் த. மணிமொழியன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 9 பெண்கள் உட்பட 73 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com