கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 34 பள்ளிகள் 100% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 34 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 34 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 12,695 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களில் 11,864 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  93.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட கல்வி  அலுவலர் அண்ணாபிள்ளை தெரிவித்துள்ளார்.
100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள்:
கும்பகோணம் ஏஆர்ஆர் மெட்ரிக் பள்ளி, சிபி வித்யாமந்தீர் மெட்ரிக் பள்ளி, கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் மேலக்காவேரி காமராஜர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, சாக்கோட்டை மாதா ஊனமுற்றோர் பள்ளி, கொட்டையூர் வள்ளலார் பள்ளி, கடிச்சம்பாடி மினர்வா பள்ளி, நீலத்தநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி, ராமானுஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, கம்பர்நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி, சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி, உடையாளூர் அரசு உயர்நிலைப் பள்ளி, பாபநாசம் ஆர்டிபி மெட்ரிக் பள்ளி, சாக்கோட்டை செயின் ஆண்டனீஸ் பள்ளி, ராஜகிரி தான்ஸ்ரீ உபயதுல்லா பள்ளி, திருபுவனம் திகோ சில்க்ஸ் மெட்ரிக் பள்ளி, உமையாள்புரம் உயர்நிலைப் பள்ளி, கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி பள்ளி, அம்மாபேட்டை புனித வளனார் பள்ளி, கபிஸ்தலம் எஸ்விஏசிடி ஜி.எம். உயர்நிலைப் பள்ளி, பசுபதிகோவில் புனித அந்தோணியார் பள்ளி, பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர் ஆலீப் மெட்ரிக் பள்ளி, நாலூர் அனுராதா மகா வித்யா மெட்ரிக் பள்ளி, மெலட்டூர் கெங்குசாமி நாயுடு பள்ளி. கபிஸ்தலம் ஜாக் அண்ட் ஜில் பள்ளி, கும்பகோணம் ஸ்ரீகலைமகள் கேந்திரா பள்ளி, அம்மாபேட்டை லட்சுமி வித்யாமந்தீர் பள்ளி, வடகுரங்காடுதுறை ஸ்ரீ வித்யாஸ்ரம் மெட்ரிக் பள்ளி, செம்போடை தூய சேவியர் பள்ளி, பாபநாசம் தூய பாஸ்டின்ஸ் பள்ளி, அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் பள்ளி, கும்பகோணம் கிரைஸ் த கிங் மகளிர் பள்ளி. கும்பகோணம் மதர் கிளாரட் மெட்ரிக் பள்ளி. கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 127 பள்ளிகளில் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com