நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவுத் துறை சார்பில் புதுக்கோட்டையில் மே 21-ல் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை சார்பில் புதுக்கோட்டையில் மே 21-ல் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மண்டலக் கூட்டுறவு இணைப்பதிவாளர் ந. மிருணாளினி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சையில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடத்தப்படும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தினரும் பயன் பெறும் வகையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மாடியில் உள்ள கமலம் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் வரும் மே 21-ல் பயிற்சிகள் தொடங்குகின்றன. தற்போது நகையின் மதிப்பு கூடியுள்ள நிலையில் வங்கிகள், நகைக்கடை, அடகுக்கடைகளில் தங்கத்தை மதிப்பிட்டு தரத்தைக் கண்டறியும் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
நகை மதிப்பீடு மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்த 100 மணி நேரப் பயிற்சியின்போது தேவையான உபகரணங்கள் வழங்கப்படும், பயிற்சி முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனம் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளர் பணி, அடகுக்கடை, நகை வணிகம் செய்யவும் வாய்ப்புள்ளது. சான்றிதழை வேலைவாய்ப்பகத்திலும் பதியலாம்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் பயிற்சியில்  மாவட்டத்தில் எந்தப் பகுதியில் இருந்தும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள், தனியார் நிறுவனப் பணியாளர், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் தற்போதைய படிப்புக்கு இடையூறு இல்லாமல் சேர முடியும். மேலும் விவரங்களுக்கு சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சை. தொடர்புக்கு - 04362-238253 மற்றும் 97880-74424.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com