புதுகை மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தஞ்சை சென்ற கர்ப்பிணி சாவு

புதுக்கோட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், தஞ்சைக்கு அனுப்பிவைக்கப்பட்ட கர்ப்பிணி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

புதுக்கோட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், தஞ்சைக்கு அனுப்பிவைக்கப்பட்ட கர்ப்பிணி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி பேபி (33). இவர், பிரசவத்துக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்தப்போக்கு அதிகமானதால், தீவிரச் சிகிச்சைக்காக புதுகை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஆனால், ராணியார் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் அவரை அனுமதிக்கவில்லையாம். இதையடுத்து, தஞ்சாவூர் ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேபி பிரசவத்தின் போது உயிரிழந்தார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த. செங்கோடன் கூறுகையில், புதுகை ராணியார் அரசு மருத்துவமனையில் கடந்த 20 நாட்களில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த போதும்பொண்ணு, ஆராயி, சாந்தி ஆகியோர் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஆலங்குடியில் இருந்து பிரசவத்துக்கு வந்த பேபியை மருத்துவர்கள் இல்லை எனக் கூறி தஞ்சாவூருக்கு அனுப்பியுள்ளனர்.
இது மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. இந்த அவல நிலையைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com