கந்தர்வகோட்டை ஒன்றியத்தில்தொடர் மழை பெய்தும் நிரம்பாத ஏரி, குளங்கள்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தற்போது பெய்துவரும் தொடர்மழையிலும் குளம், ஏரிகள் நிரம்பவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தற்போது பெய்துவரும் தொடர்மழையிலும் குளம், ஏரிகள் நிரம்பவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கந்தர்வகோட்டை பகுதியில் பெரும்பாலான விவசாய நிலங்களில் பருவமழையை நம்பியே பயிரிடப்படுகின்றன.
ஆழ்துளை கிணறுகள் மூலமாக விவசாயம் செய்தாலும், கோடையில் நிலவிய கடும் வறட்சியினால் நிலத்தடி நீர் மட்டம் பல நூறு அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழைபெய்தாலும், குளம், ஏரிகள் நிறையாமல் உள்ளன. இதுகுறித்து அக்கச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயி வீராசாமி கூறியதாவது:
இப்பகுதியில் கன மழை பெய்து பல வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது, பெய்த மழை போதிய அளவில் இல்லை. இருப்பினும் இந்த நீரும் ஏரி, குளங்களுக்கு செல்லும் வகையில் வடிகால் வசதியில்லை.
வரத்து வாரிகள் செப்பனிடப்படாமல் புதர் மண்டியும், தூர்ந்தும் உள்ளது. இதனால், மழை நீர், நீர் நிலைகளுக்கு செல்லாமல் வீணாகி வருகிறது என்றார்.
மழைக்கு முன்பாகவே வரத்துவாரி, வடிகால் பகுதிகளை தூர்வாரியிருந்தால், தற்போது பெய்யும் மழைநீரை சேமித்திருக்க முடியும் என விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com