விதிகளை கடைப்பிடித்தால் விபத்துகளை தவிர்க்கலாம்'

சாலை, போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தால், விபத்துகளை தவிர்க்க முடியும் என திருமயம் காவல் ஆய்வாளர் ஆ. மனோகரன்  கூறினார்.

சாலை, போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தால், விபத்துகளை தவிர்க்க முடியும் என திருமயம் காவல் ஆய்வாளர் ஆ. மனோகரன்  கூறினார்.
புதுக்கோட்டை அருகே உள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு, விபத்துகளை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியதாவது:
விபத்து என்றாலே அது இழப்புதான். அது உயிரிழப்பாகவும் இருக்கலாம். உறுப்புகள் இழப்பாகவும் இருக்கலாம். எனவே, வாழ்க்கையில் இழப்புகள் இன்றி வாழ்வதே பெரும் வரம்.
போக்குவரத்து விதிகளையும், சாலை விதிகளையும் முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே விபத்துகளின்றி வாழமுடியும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஒவ்வொருவரும் கட்டாயம் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட்டும் அணிய வேண்டும். வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், காப்பீடு, வாடகை வாகனமாக இருந்தால் பெர்மிட் இவை அனைத்தும் கொண்டு செல்ல வேண்டும்.
18-24 வயதுக்கு இடைப்பட்டவர்களே பெரும்பாலும் விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். எனவே, இந்த வயது பிரிவினர் வாகனங்களை மிதவேகத்துடனும், கவனமாகவும் இயக்க வேண்டும். உயிரிழப்பு குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்களுக்கு ஈடுசெய்ய முடியாததாகும்.
வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனச் சிதறல், கோபமான மனநிலை போன்றவற்றாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. செல்லிடப்பேசியில் பேசியவாறு வாகனங்களை ஓட்டுவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது ஆகியவற்றாலும் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் நேரிடுகின்றன. எனவே, வாகனங்களை ஓட்டும்போது கவனமுடன் விதிகளை பின்பற்றி விபத்தில்லா வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்றார்.
இம்முகாமில், கல்லூரி முதல்வர் குழ.முத்துராமு வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் க.முத்துராமன் நன்றி கூறினார். இதில், திருமயம் காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் (பயிற்சி) நிகல்யா, போலீஸார், கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள், மாணவ,மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com