வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி'

வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி நிறுவனங்கள் கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி நிறுவனங்கள் கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோருக்கான சிறப்பு முகாமைத் தொடங்கிவைத்து அவர், பேசியதாவது:
இளைஞர்கள் முன்னேறும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆட்சியரகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட தொழில் மையத்தை தொழில் முனைவோர் அணுகி, தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், சேவை நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும், வியாபார நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும், கடன் வழங்கப்படும். வங்கியில் கடன் வழங்க ஒப்பளிப்பு கொடுக்கும் நபர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் 7 நாள்களுக்கு மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்படும். தொழில் முனைவோர்களுக்கு தேவையான பயிற்சிகளை இயந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் இயங்கும் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலமாகவும் பெறலாம் என்றார் ஆட்சியர்.
இதில், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் என். இளங்கோவன், சிறுதொழில் அதிபர்கள் சங்கத் தலைவர் எஸ்.ராஜ்குமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் சி.சுப்பிரமணியன், மாவட்ட தொழில்மைய திட்ட மேலாளர் எஸ்.திரிபுரசுந்தரி, தாட்கோ மாவட்ட மேலாளர் என்.கோபால், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com