கந்தர்வகோட்டை அருகே  சாலைப் பணிகள் முடியும் முன்பே  சுங்க வரி வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்

புதுக்கோட்டை - தஞ்சை இருவழிச் சாலைப் பணிகள் முழுமையடையாத நிலையில் கந்தர்வகோட்டை வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு

புதுக்கோட்டை - தஞ்சை இருவழிச் சாலைப் பணிகள் முழுமையடையாத நிலையில் கந்தர்வகோட்டை வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.  
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர், மானாமதுரை இருவழிச்சாலை பணிக்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
இதில் புதுக்கோட்டை, தஞ்சை இருவழிச் சாலையில் நடைபெற்று வரும் பாலங்கள் கட்டும் பணி இதுவரை நிறைவடையவில்லை. மேலும் சாலையில் உள்ள வளைவுகள் சரிசெய்யப்படாததால் இந்தச் சாலைகளில் தொடர் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பெருங்களூரு, கந்தர்வகோட்டை பகுதியில் சாலைப் பணி சரிவர செய்யப்படவில்லை. சாலையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தையும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் அச்சத்தில் இப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்.  பணிகள் முழுமை பெறாத நிலையில் சுங்கவரிச் சாவடி மட்டும் விரைவாக கட்டப்பட்டு அதன் மூலம் அவசர கதியில் வாகனங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ராமநாதபுரம் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com