பொன்னமராவதி அருகே பிடிபட்ட13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் பொதுமக்களை அச்சுறுத்திய 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் பொதுமக்களை அச்சுறுத்திய 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொன்னமராவதி வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் வீதியைச் சார்ந்தவர் தினேஷ். இவரது வீட்டின் அருகே திங்கள்கிழமை 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கிடந்துள்ளது. இதைக்கண்ட இவர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன்படி நிலைய அலுவலர்(பொறுப்பு) அழகு தலைமையில் அங்குவந்த தீயணைப்பு படையினர் மலைப்பாம்பினை பிடித்தனர். தொடர்ந்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்தில் மலைப்பாம்பினை மாவட்ட அலுவலர்(பொறுப்பு) ஹக்கீம் பாட்சா வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com