கல்வி நிலையங்களில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் பல்வேறு கல்வி நிலையங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டையில் பல்வேறு கல்வி நிலையங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி: திருக்கோகர்ணத்தில் உள்ள பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கம்பன் கழகச் செயலர் இரா.  சம்பத்குமார்  பங்கேற்றார். கிராமியக் இசை நிகழ்ச்சி,  பொய்க்கால் குதிரை, காளை ஆட்டம், தப்பாட்டம்  ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
டாக்டர் ராமதாஸ் வரவேற்றார். பள்ளியின் மேலாண் இயக்குநர் நிவேதிதா மூர்த்தி நன்றி கூறினார்.
பேராசிரியர்கள்  கருப்பையா,  அய்யாவு, வழக்குரைஞர்  செந்தில்குமார், கல்வியாளர்கள் கணேசன், டி. ரவிச்சந்திரன், கவிஞர் பீர் முகமது, யோகா ஆசிரியர்  பாண்டியன் ஆகியோர்  பங்கேற்றனர்.
அரிமளம் ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக் பள்ளி: நேரு படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி  ஆசிரியை மேனகாவின் பரதம், தொடர்ந்து நேரு பற்றி ஆசிரியர் எழில் சக்கரவர்த்தி, ஆசிரியை பாண்டிமீனாள் பேசினர். வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி:  பள்ளித் தலைமையாசிரியர் சாமி. சத்தியமூர்த்தி  தலைமை வகித்தார். சைல்டு ஹெல்ப்லைனின் குழந்தைகளின் வன்முறைக்கு எதிரான உறுதிமொழியை மாணவர்கள்  ஏற்றுக்கொண்டனர். நேரு  குறித்த  கவிதைகள், பாடல்களை  குழந்தைகள் பாடினர். ஏற்பாடுகளை,  கணித ஆசிரியர்  இரா. சந்திரசேகரன், அறிவியல் ஆசிரியர் மு. ஹாஜாமுஹைதீன், ஆசிரியர் ஆனந்த்பாபு ஆகியோர் செய்தனர். நற்சாந்துபட்டி அன்னை மெட்ரிக் பள்ளி:
பள்ளிச் செயலர் ஜெயசீலன் தலைமையில், முதல்வர் கஸ்தூரிநாதன், மேற்பார்வையாளர் சுகுமாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில்,  காரைக்குடி புலவர் நாகப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.  அறிவியல் கண்காட்சியை சிங்கப்பூர் தொழிலதிபர் சார்லஸ் மனோகர் திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com