பொன்னமராவதி ஒன்றியத்தில் நவ. 17-ல் அறிவியல் கண்காட்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டத்தின் கீழ் குறுவள மைய அளவில்

அனைவருக்கும் கல்வி இயக்கம் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டத்தின் கீழ் குறுவள மைய அளவில் அறிவியல், கணித ஆற்றலை மகிழ்ச்சியான கற்றலாக அமைப்பதிற்கும், புதுமை செய்வதில் கவனம் செலுத்தவும் தேசிய வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பம், கணிதத்தின் பங்கு என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இக்கண்காட்சி பொன்னமராவதி, கொன்னையூர், திருக்களம்பூர், புதுப்பட்டி, நகரப்பட்டி, சடையம்பட்டி, ஆலவயல், நல்லூர், காரையூர், மேலத்தானியம் உள்ளிட்ட 10 குறுவள மையங்களில் நடைபெற உள்ளது.  இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மையத்திலிருந்தும் சிறந்த மூன்று மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பான பள்ளி தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும்.  கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்க  பொன்னமராவதி வட்டார வள மையம் மற்றும் உதவித்தொடக்க கல்வி அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com