டெங்கு காய்ச்சல் தடுப்பில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர்..

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக  களத்தில் பல்வேறு அமைப்பினரும், அரசியல்  கட்சியினரும் வியாழக்கிழமை களமிரங்கி  பொதுமக்களுக்கும்,

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக  களத்தில் பல்வேறு அமைப்பினரும், அரசியல்  கட்சியினரும் வியாழக்கிழமை களமிரங்கி  பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயத்தை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,  திருவப்பூர் பகுதியில்  திமுக சார்பில் நகரச் செயலர் க. நைனாமுகமது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது.
மாவட்ட சிறுபான்மைப்பிரிவு அமைப்பாளர் எஸ். முகம்மது ஆசாத், வட்ட பிரதிநிதி  காசி விஸ்வநாதன், சாலை விபத்து தடுப்பு, மீட்பு சங்கத் தலைவர் க. மோகன்ராஜ்,  நிர்வாகிகள் எம். மூர்த்தி, க. அடைக்கலம், இந்திய கம்யூ. நிர்வாகி ரமேஷ், வட்டப் பிரதிநிதி ஆனந்த்,தொழிற்சங்க நிர்வாகி  கே. கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை விவசாய அணி துணை அமைப்பாளர் கனகம்மன் பாபு செய்தார். புதுக்கோட்டை நகர திமுக சார்பில் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
 திருக்கோகர்ணம் நகராட்சித் தொடக்க பள்ளி:  திருக்கோகர்ணம் அரசு மருந்தக மருத்துவ அலுவலர்  அனிதா முன்னிலையில் நடைபெற்ற  டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமில், மாணவ, மாணவிகளுக்கு  நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.  
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமார் சிவராமகிருஷ்ணன்,  தலைமை ஆசிரியர் சுப்புலெட்சுமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, சந்திரா உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.
நாம் தமிழர் கட்சி:
கட்சி சார்பில் கடந்த 13.10 2017 முதல் வியாழக்கிழமை  வரை  புதுக்கோட்டை தொகுதி, வெட்டன்விடுதி, மழையூர், இச்சடி, பெருங்களூர், புதுகை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில்   நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரத்துடன் நிலவேம்பு கசாயமும்  விநியோகித்து வருகின்றனர். இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகி கு. ஜெயசீலன் தெரிவித்தார். ஏற்பாடுகளை, தொகுதித் தலைவர் இரா. கணேசன், செயலர் எம். அருண்மொழிச்சோழன் உள்ளிட்டோர்  செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com