கருப்புக்குடிப்பட்டியில்  கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்காவிடில் தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

பொன்னமராவதி ஒன்றியம்,  திருக்களம்பூர் ஊராட்சி, கருப்புக்குடிப்பட்டியில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொன்னமராவதி ஒன்றியம்,  திருக்களம்பூர் ஊராட்சி, கருப்புக்குடிப்பட்டியில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் பொன்னமராவதி வட்டாட்சியரிடம்  அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
திருக்களம்பூர் ஊராட்சிக்குள்பட்ட கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் மொத்தம் 2144 வாக்காளர்கள் உள்ளனர். பூத் எண் 98-ல் 903 வாக்காளர்களும், பூத் எண் 99-ல் 1241 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த இரண்டு வாக்குச்சாவடிகளும் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவாக இருக்கிறது. இதனால் வாக்களிக்க செல்லும்போது அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.  இதற்கு மாற்றாக,  இரண்டு வாக்குச்சாவடியிலும் பொது என்று இருப்பதை பிரித்து ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே வாக்குச்சாவடி அமைத்திட,  கூடுதலாக இரண்டு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலின்போது எங்கள் கிராமத்தில் மூன்று வாக்குச்சாவடி  ஏற்படுத்தப்படுகிறது. அத்தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் நான்கு வாக்குகள் அளிப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே,  உள்ளாட்சித்தேர்தலின்போதும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க கூடுதலாக 3 வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும்.
மேலும் திருக்களம்பூர் ஊராட்சியில் ஊராட்சி வார்டு என்று எடுத்துக்கொண்டால் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது. இதில் கருப்புக்குடிப்பட்டி வாக்குச்சாவடிக்கு உள்பட்டதில் 3 வார்டும்,  திருக்களம்பூர் வாக்குச்சாவடிக்கு உள்பட்டதில் 6 வார்டும் இருந்து வருகிறது.  கருப்புக்குடிப்பட்டி வாக்குச்சாவடிக்கு அடங்கிய அரியாண்டிபட்டி, கருப்புக்குடிப்பட்டி வடக்கு, கருப்புக்குடிப்பட்டி தெற்கு, காடம்பட்டி, ஊத்துக்குழி, கருதன்கோடன்பட்டி ஆகிய 6 பிரிவுகள் உள்ளதற்கு தனித்தனி வார்டு அமைக்க வேண்டும்.  கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com