டெங்குவை கட்டுப்படுத்தாததை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மக்களின் உயிரைப் பலிவாங்கும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய,  மாநில அரசுகளைக் கண்டித்து, புதுக்கோட்டையில்

மக்களின் உயிரைப் பலிவாங்கும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய,  மாநில அரசுகளைக் கண்டித்து, புதுக்கோட்டையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமைஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிக பாதிப்புள்ள மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் இருந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர், சிறுமிகள், பள்ளி மாணவர்கள்,  பெரியவர்கள் என இது வரை 10 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் என்ன காய்ச்சலால் இறந்தனர் என்பதை சுகாதாரத்துறை அறிவிக்காத நிலையே நீடிக்கிறது. நீதிமன்றத்தால் கேள்வி கேட்கப்பட்ட பிறகே டெங்குக்காய்ச்சலுக்கான சிகிச்சையை  அரசின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் சேர்த்துள்ளதாக அரசு அறிவித்தது.
டெங்கு உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர்கள் (வடக்கு)
வெ.மா. விடுதலைக்கனல், (தெற்கு) ப.சசிகலைவேந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். துணைச் செயலர் சி. சந்திரபாண்டியன் முன்னிலை வகித்தார். மேலிடப் பொறுப்பாளர் ஜெ. தங்கதுரை,  நிர்வாகிகள் தெ. கலைமுரசு, வெ. சமத்துவன்,  இரா. திருமறவன்,  ரெ. அண்ணாதுரை, கரு. வெள்ளைநெஞ்சன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் டெங்குவை கட்டுப்படுத்த தவறிய மத்திய,  மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com