புதுகை அரசு மருத்துவக் கல்லூரி டெங்கு காய்ச்சல் பிரிவில் எம்எல்ஏ ஆய்வு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு  மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு  மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை புதுகை  சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு வியாழக்கிழமை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.  
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள டெங்குக் காய்ச்சல் நோயாளிகளுக்கான பிரிவுக்கு நேரில் சென்ற அவர் அங்குள்ள நோயாளிகளிடம்  முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.
மேலும்,  மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்களிடம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், பெரியவர்களுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும் வெளிநோயாளியிடம்  அளிக்கப்படும் சிகிச்சையில்  குறைபாடுகள் எதுவும் உள்ளதா எனக் கேட்டபோது, வெளிநோயாளிகள் ஏற்கெனவே நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த மாவட்ட மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முறையிட்டனர். இதையடுத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார்.
இதில், மாவட்ட பொருளர் ஆ.செந்தில், நகரச் செயலர் க. நைனாமுகமது,  நிர்வாகிகள் எஸ். அசோக்பாண்டியன், மணிமொழிமனோகரன், அ. ரெத்தினம்,  கி.கணபதி, வேலுச்சாமி, கமலாசெல்வம், சி.மதியழகன், டி.அப்புக்காளை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com