"பணித்தளப் பொறுப்பாளர்கள் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

பணித்தளப் பொறுப்பாளர்கள் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் மகளிர் திட்ட இயக்குநர் சரோஜாதேவி.

பணித்தளப் பொறுப்பாளர்கள் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் மகளிர் திட்ட இயக்குநர் சரோஜாதேவி.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளஜ் தேவையான நடவடிக்கைகளை விளக்கும் பொருட்டு அப்பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் தெளிவுரை வழங்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். மதியழகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சரோஜாதேவி பேசியது:  
ஊராட்சியில் உள்ள கிராமங்களை தூய்மையாக பராமரிக்க தற்போதைய சூழ்நிலையில் துப்புரவுப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற வேண்டியது அவசியம். எனவே பணித்தளப் பொறுப்பாளர்கள் மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தேவைப்படும் இடங்களில் துப்புரவுப் பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபடவேண்டும் என்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் காளீஸ்வரன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com