அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிப்பு

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக: நகரச் செயலர் க. பாஸ்கர் தலைமையில் , மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியின் தலைவர் எஸ். செல்லத்துரை, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வி.சி. ராமையா, முன்னாள் துணைத்தலைவர் எஸ். அப்துல்ரகுமான் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக: புதுக்கோட்டை எம்எல்ஏ பெரியண்ணன்அரசு தலைமையில் திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி தலைமையில் நகரச் செயலர் க. நைனாமுகமது, முன்னாள் எம்எல்ஏ- ரா.சு. கவிதைப்பித்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேமுதிக: மாவட்டப் பொருளாளர் எஸ்.கே. கதிரவன் தலைமையில், நகரச்செயலர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திராவிடர் கழகம்: மண்டலத் தலைவர் பெ. ராவணன் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதேபோல், மதிமுக சார்பில் மாவட்டப்பொருளாளர் எஸ்.கே கலியமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். ஜெ. தீபா பேரவைசார்பில் மாவட்டச்செயலர் ஹஜ்முகமதுஅலி தலைமையில் நகரச்செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். மேலும், டிடிவி- தினகரன் அணி சார்பில் நகரச்செயலர் அ. வீரமணி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
அதிமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் பி.எம்.பெரியசாமி தலைமையில் எம்ஜிஆர் சிலை பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்த கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அறந்தாங்கி வடக்கு ஒன்றிய செயலாளர் சி. வோலாயுதம், ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலாளர் தி. கூத்தையா, ஆலங்குடி தொகுதி செயலாளர் எஸ்.குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக (அம்மா அணி- தினகரன் ஆதரவு) சார்பில், அறந்தாங்கி நகரச்செயலாளர் க. சிவசண்முகம் தலைமையில் வடகரை முருகன் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக வந்த கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திமுக சார்பில் கலைஞர் மன்றத்திலிருந்து நகர செயலாளர் இரா.ஆனந்த் தலைமையில் ஊர்வமலமாக வந்த கட்சியினர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கைராசி. புருசோத்தமன், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் பழ.மாரியப்பன், சுகந்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் நகர செயலாளர் எம்.மணிகாந்த் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் அறந்தாங்கி மூர்த்தி, மணமேல்குடி கார்த்தி உள்ளிட்ட கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். மதிமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் பாண்டிகுடி இராஜேந்திரன் தலைமையில் நகரச் செயலாளர் மோகன், எக்சல் சீனிவாசன், மற்றும் பலர் மாலை அணிவித்தனர்.
அதிமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப் படத்துக்கு ஒன்றியச் செயலர் ராம. பழனியாண்டி தலைமையில் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகரச் செயலர் அ.தங்கப்பன், ஒன்றிய அவைத்தலைவர் வை. பழனிச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திமுக சார்பில், நகரச் செயலர் அ.அழகப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய பொருளாளர் ம. அண்ணாதுரை, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com