நல்லாண்டார்கொல்லையில் தீவிபத்து ஏற்பட்ட ஓஎன்ஜிசி கழிவுத் தொட்டி மூடல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் நல்லாண்டார்கொல்லையில் தீவிபத்து ஏற்பட்ட ஓஎன்ஜிசியின் கழிவுத் தொட்டியை மூடும் பணியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் நல்லாண்டார்கொல்லையில் தீவிபத்து ஏற்பட்ட ஓஎன்ஜிசியின் கழிவுத் தொட்டியை மூடும் பணியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.
நெடுவாசல் நல்லாண்டார்கொல்லை, வடகாடு கல்லிக்கொல்லை, வானக்கண்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசலில் ஏப். 12ஆம் தொடங்கிய போராட்டம் 157 நாள்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நெடுவாசல் நல்லாண்டார்கொல்லையில் குடியிருப்பு ,விளைநிலங்கள் இருக்கும் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேகரிக்கும் தொட்டியில் வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பற்றியது. கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை திருமயம் எம்எல்ஏ எஸ்.ரகுபதி, ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். அங்கு சென்ற கறம்பக்குடி வட்டாட்சியர் சக்திவேல் தலைமையிலான வருவாய்த் துறையினர், லாரிகளில் மணல் கொண்டு வந்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு மண்ணை கொட்டி கழிவுத் தொட்டியை மூடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com