புதுகையில் தூய்மையே சேவை உறுதி ஏற்பு

புதுக்கோட்டையில் தூய்மையே சேவை உறுதி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் தூய்மையே சேவை உறுதி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தூய்மை சேவை உறுதி ஏற்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமை வகித்தார்.
இதில், செப்.15 முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்.2 வரை தூய்மையே சேவை இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து அதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான, புதிய இந்தியாவை உருவாக்க உறுதி மொழி ஏற்போம். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்நிலைகள், இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைபிடிப்போம் என்றும், வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறைகளை கட்டுவதுடன், அவ்வாறு கழிப்பறைகள் கட்டாதவர்களையும் கழிப்பறைகள் கட்டச்செய்து திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களும், நகரங்களும் உருவாக்கப் பாடுபடுவோம் என்றும், கழிப்பறை பயன்படுத்துவதுடன், கை, கால்களை சுத்தமாகக் கழுவுதல் மற்றும் இதர சுகாதாரப் பழக்கங்களையும் கடைப்பிடிப்போம் என்றும், குறைத்தல், மறுசுழற்ச்சி, மறு பயன்பாடு கோட்பாட்டின் படி திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்றார்.
இதில், திட்ட இயக்குநர் எம். சந்தோஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், மாவட்ட சமூகநல அலுவலர் ரேணுகா, வருவாய் கோட்டாட்சியர் (பொ)ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com