வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து தர்னா: பெண் ஆட்டோ ஓட்டுநர் கைது

புதுகையில் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து, தர்னாவில் ஈடுபட்ட பெண் ஆட்டோ ஓட்டுநரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

புதுகையில் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து, தர்னாவில் ஈடுபட்ட பெண் ஆட்டோ ஓட்டுநரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
புதுகை திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா.  இவர் புதுக்கோட்டை நகர்ப் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகைக் கடன் பெற்றிருந்தாராம். மேலும் அதேவங்கியில் கார் கடனும் பெற்று தவணை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வங்கி நிர்வாகம் சரோஜாவின் நகையை ரூ.3 லட்சத்துக்கு ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, நகையை ஏலம் விட வேண்டும் எனக் கூறி தனது காரை வங்கி நிர்வாகத்திடம் கொடுத்து விட்டு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, சரோஜாவின் நகையை வங்கி நிர்வாகம் ஏலம் விட்டதாகத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சரோஜா புதுகை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை பீடத்தின் அருகே அமர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைக் கண்டித்து தர்னாவில் ஈடுபட்டார்.  
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற புதுகை நகர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் போலீஸார், சரோஜாவைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com