"மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது'

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

புதுக்கோட் டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் 27 வகையான நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அகரப்பட்டியில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் சுனில் பாலிவால், ஆட்சியர் சு. கணேஷ், காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிவாரணப் பொருள்களை வழங்கி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியது:
தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலால் பல்வேறு மாவட்டங்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. சேத பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால அடிப்படையிலான மீட்பு பணிகளால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. 
புயலால் பதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துத் தர அரசு தயாராக உள்ளது'' என்றார் விஜயபாஸ்கர்.
தலா ரூ.3,800 மதிப்பீட்டில் வழங்கப்படும் 27 வகையான நிவாரணப் பொருட்கள்: அரிசி -10 கிலோ, பால் பவுடர் - 1 கிலோ, டீ த்தூள் - 200 கிராம், பாய் (அல்லது) ஜமுக்காலம் - 1, போர்வை -1, குளியல் சோப்பு - 2, துணி சோப்பு - 2, பிளாஸ்டிக் வாளி - 1, பிளாஸ்டிக் கோப்பை - 1, துவரம்பருப்பு - 2 கிலோ, சர்க்கரை - 2 கிலோ, சாம்பார் பொடி - 100 கிராம், சமையல் எண்ணெய் - 2 லிட்டர், தேங்காய் எண்ணெய் - 50 கிராம், கொசுவர்த்தி சுருள் - 1 பாக்கெட், நாப்கின் - 2 பாக்கெட், தீப்பெட்டி - 2, பிஸ்கட் பாக்கெட்டுகள் - 4, புளி -1 கிலோ, உப்பு - 1 கிலோ, ரவை - 2 கிலோ, வேட்டி - 2, சேலை -2, துண்டுகள் - 2, நைட்டி - 1, கைலி - 2, குடை-1.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஆறுமுகம், டிஆர்ஓ ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
கந்தர்வகோட்டையில்... தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 27 வகையான புயல் நிவாரணப் பொருட்களை 74 பேருக்கு  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை வழங்கினார். 
கந்தர்வகோட்டை தாலுகா தச்சங்குறிஞ்சி ஊராட்சியை சேர்ந்த மலையப்பட்டி கிராமத்தில்  புயலால் பாதிக்கப்பட்ட குடிசைகள், ஓட்டு வீடுகளை சேர்ந்த 74 பேருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 27 வகை நிவாரண பொருள் அடங்கிய பெட்டிகளை அமைச்சர்விஜயபாஸ்கர்  வழங்கினார்.  
மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்தார்.  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜ்,  கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தாமலை ப. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  ஆர்.டி.ஒ.  டெய்சிகுமார்,  கந்தர்வகோட்டை வட்டாட்சியர் இ.  ஆரமுததேவசேனா,  அதிமுக ஒன்றியச் செயலர் ஆர். ரெங்கராஜன் , ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசபிரபு, மகாலிங்கம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com