விருதுபெற்ற உருவம்பட்டி ஆசிரியருக்கு பாராட்டு

மனித உரிமைகள் தின விழாவில் சிறந்த கல்விச் சிந்தனையாளர் விருதுபெற்ற அன்னவாசல் ஒன்றியம், உருவம்பட்டி பள்ளி

மனித உரிமைகள் தின விழாவில் சிறந்த கல்விச் சிந்தனையாளர் விருதுபெற்ற அன்னவாசல் ஒன்றியம், உருவம்பட்டி பள்ளி ஆசிரியர் முனியசாமியை  இலுப்பூர்  மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பாராட்டினார். 
லயன்ஸ் சங்கம் கிரீன் சிட்டி மற்றும் டீம் டிரஸ்ட் ஆகியவை சார்பில் மனித உரிமைகள் தினவிழா திருநெல்வேலி தெற்கு புறவழிச் சாலையில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ விஜயா கார்டனில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் சிறந்து விளங்கும் 200  பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி தொடக்கப் பள்ளி ஆசிரியர் கு.முனியசாமிக்கு சிறந்த கல்விச் சிந்தனையாளர் விருதை பணிநிறைவு பெற்ற திருநெல்வேலி மாவட்ட நீதிபதி எம்.ராமச்சந்திரன், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை சிறை கண்காணிப்பாளர்  சி. கிருஷ்ணகுமார், சமூக ஆர்வலர் திருமலைமுருகன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.  
விருதுபெற்ற ஆசிரியரை இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன், பள்ளி துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com